நாட்டில் கொரோனா பாதிப்பு 15 சதவிகிதத்திற்கும் மேல் உள்ள 150 மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை செய்த பிறகு, 15 சதவிகிதத்திற்கும் மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் சங்கிலியை தடுக்க அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் கடுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என ஆய்வுகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 15 சதவிகிதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு இருப்பதால், இந்தப் பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்த வாய்ப்புள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்