Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

புதுச்சேரி: 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியான பூர்வா கார்க் விளக்கமளித்துள்ளார்.

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறபித்த வழக்கு மீதான விசாரணை  நேற்று சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதிகள், 144 தடை பிறப்பித்தறகான காரணம் குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் தரவேண்டும் என்றும் அவ்வாறு இல்லை என்றால் நீதிமன்றமே 144 தடையை நீக்கும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது தேர்தல் அதிகாரி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது. குடும்பமாகவோ, நண்பர்களுடன் சேர்ந்து சென்று வாக்களிக்கவோ தடை இல்லை. சட்டவிரோதமாக கூட்டம் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை உத்தரவு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை அமல்படுத்தப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மார்ச் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவு தேர்தல் ஆணைய அனுமதியுடன் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார். அதனை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.சுமதி, “எந்த காரணங்களையும் குறிப்பிடாமல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க் பிறப்பித்துள்ளார். மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக ட்விட்டர் பதிவுகளை, மாவட்ட ஆட்சியர் பலமுறை ரீட்வீட் செய்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவராக இருப்பதால் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.” என்றார்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாலா, ”தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு.” என்றார்.

image

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நாங்கள் அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோமா? என கேள்வி எழுப்பினர். விஷயத்தின் தன்மையை ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். 

அதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிப்பது வழக்கம் என்றார். ஆனால் புதுச்சேரி அரசின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் தேர்தல் ஆணையம் தானே தவிர, அரசியல் கட்சி கிடையாது என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். 144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்று உரிய தெளிவுபடுத்துதலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிடாவிட்டால், நீதிமன்றமே அதை ரத்து செய்யும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் 144 தடை உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3wscLI8

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்