Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவிப்பு

கொரோனா நெருக்கடியால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு,  கூகுள் நிறுவனம் 135 கோடி ரூபாய் நிதியுதவி  செய்ய உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா நெருக்கடிக்கு கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர்  உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

மோசமான கோவிட்-19 பாதிப்பில் சிக்கியிருக்கும் இந்தியாவுக்கு உதவி செய்துள்ள, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, “ இந்தியாவில் ஏற்பட்டுள்ள  மோசமான கோவிட் நெருக்கடிக்கு நிவாரணமாக கூகுள் மற்றும் கூகுள் நிறுவனங்கள், யுனிசெஃப் மூலமாக மருத்துவப் பொருட்கள் வாங்க 135 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கிறது. அதிக ஆபத்துள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும்,  முக்கியமான தகவல்களை பரப்பவும் உதவி செய்வோம் ”என்று தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

image

இந்தியாவின் கொரோனா நெருக்கடி பற்றி ட்வீட் செய்திருக்கும் மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, "இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை மனதை உடைய வைத்துள்ளது. அமெரிக்க அரசு இந்தியாவுக்கு உதவ முன்வந்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன் . மைக்ரோசாப்ட்  அதன் வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண முயற்சிகளுக்கு உதவுவதற்கும், மிக முக்கியமான ஆக்ஸிஜன் சாதனங்களை வாங்குவதற்கும் தொடர்ந்து பயன்படுத்தும் ”என்று தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3gK7bLX

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்