புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனா பாதித்து உயிரிழந்த மூதாட்டியின் உடல், சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தால் 11 மணி நேர தாமதத்திற்கு பிறகு மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 84 வயது மூதாட்டி ஜெயலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 12ஆம் தேதி காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாள் சிகிச்சைக்கு பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மூதாட்டியை அவரது உறவினர் மேகநாதன் என்பவர் வீட்டில் வைத்து கவனித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த நிலையில், கூடுதல் அதிர்ச்சியாக மூதாட்டி உயிரிழந்தார்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரி இல்லை என்று அலட்சியமாக பதில் கூறினர். இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தமமுக அமைப்புக்கும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கவில்லை. மூதாட்டியின் உடலில் இருந்து துர்நாற்றம் வரவே 11 மணி நேரத்திற்கு பிறகு தமமுக தொண்டு நிறுவனத்திற்கு அனுமதியளித்தனர். புதுச்சேரி சுகாதாரத்துறையின் அலட்சியப் போக்கு பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்