தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த கல்வியாண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளும் நடத்தப்படாமல், பொதுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனவே அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அந்தந்த பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இந்த தேர்வு கட்டாயமில்லை என்றும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணிலிருந்து கூடுதல் மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படலாம் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்