இந்தியா - இங்கிலாந்து இடையே அகமதாபாத்தில் இன்று தொடங்கவுள்ள டி20 போட்டியில் அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடர் இன்று தொடங்குகிறது.
5 போட்டிகளும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், ராகுல் திவேதியா உள்ளிட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காயத்தில் இருந்து மீண்ட அனுபவ வீரர் புவனேஷ்வர்குமார் அணிக்குத் திரும்பியுள்ளார். இயான் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், சாம் கரண், ஆர்ச்சர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.
இந்தியா உத்தேச அணி:
ரோகித் சர்மா
ஷிகர் தவான்
விராட் கோலி
கேஎல் ராகுல்
ரிஷப் பன்ட்
ஹர்திக் பாண்ட்யா
அக்ஸர் படேல்
வாஷிங்டன் சுந்தர்
புவனேஷ்வர் குமார்
தீபக் சஹார்
சஹால்
இங்கிலாந்து உத்தேச அணி
ஜோஸ் பட்லர்
ஜேசன் ராய்
டேவிட் மலான்
ஜானி பாரிஸ்டோ
பென் ஸ்டோக்ஸ்
இயான் மார்கழ்
சாம் கரன்
டாம் கரன்
கிறிஸ் ஜார்டன்
ஜோப்ரா ஆர்ச்சர்
அடில் ரஷீத்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்