தமிழகத்தில் இன்னும் 'DOUBLE MUTANT' வகை கொரோனா கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் கொரோனா அதிகரிப்புக்கு வெளிநாட்டு கொரோனா பாதிப்பு காரணமில்லை. தமிழகத்தில் மக்கள் மாஸ்க் போடுவதை முழுமையாக தவிர்ப்பதுதான் கொரோனா பரவ காரணம். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிப்பால் தினசரி 2 ஆயிரத்தை தாண்டும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 'DOUBLE MUTANT' வகை கொரோனா இதுவரை கண்டறியப்படவில்லை. 1.28 லட்சம் கிராமப்புறங்களில், சுமார் 2 ஆயிரம் கிராமப்புறங்களில் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக நகரங்களில் 1.22 லட்சம் தெருக்களில் 3,960ல் மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
25 லட்சம் கொரோனா தடுப்பூசி பயன்படுத்தியுள்ளோம். இன்னும் 10 லட்சம் தடுப்பூசி ஏப்ரல் முதல்வாரத்தில் வரும். அறிகுறிகள் இருந்தால் சுயமருத்துவம் பார்த்துக்கொள்ளாமல் மருத்துவமனையை அணுக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்