Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

டெல்லி அரசு அதிகாரங்களை முற்றிலும் முடக்கும் மசோதா: புதிய அரசியல் புயலை சந்திக்கும் பாஜக!

https://ift.tt/31ghfTY

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா ஒன்றின் மூலம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரங்களை அளித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கரங்களை முற்றிலும் கட்டிபோடுவதற்கு தீவிரம் காட்டப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் டெல்லி அரசியலில் மட்டுமின்றி, தேச அளவிலும் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

புதுச்சேரி மற்றும் தேசிய தலைநகரான டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களும் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட சட்டப்பேரவை இருந்தாலும் யூனியன் பிரதேசங்கள் என்பதால், தொடர்ந்து அந்த மாநிலங்களில் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் இடையே மோதல் நடந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு காரணம் மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசால் நியமிக்கிப்பட்ட துணைநிலை ஆளுநர்கள் என்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், டெல்லி அரசின் அதிகாரங்களை குறைத்து, துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மசோதாவால் இதுகுறித்த அரசியல் புயல் மீண்டும் வேகம் பெற்றுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணைநிலை ஆளுநர் அணில் பைஜால் இடையே மோதல் தொடர்வதன் நீழ்ச்சியாகவே இந்த மசோதாவை நரேந்திர மோடி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டுகிறது.

மக்களவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்த மசோதாவின்படி, டெல்லி அரசு என்பதன் பிரதிநிதி டெல்லியின் துணைநிலை ஆளுநர்தான் என சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. இது பா.ஜ.க. நாடாளுமன்றம் மூலம் கெஜ்ரிவாலை முடக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

டெல்லி அரசு அதிகாரங்களை வரையறுக்கும் சட்டத்தில் செய்யப்படும் திருத்தங்கள், துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகிறது. ஏற்கெவே உச்ச நீதிமன்றம் வரை இது தொடர்பான வழக்கு நடந்தபோது, டெல்லியைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களில் துணைநிலை ஆளுநருக்கு இறுதி அதிகாரம் என்பது உறுதி செய்யப்பட்டு, அதேநேரத்தில் பிற விவகாரங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் தலைவரான முதலமைச்சர் தேவையான முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

சட்டப்பேரவைக்கு 'செக்'

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மூலம், டெல்லி சட்டப்பேரவை முடிவுகள் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலைப் பெறவில்லையென்றால், குடியரசுத் தலைவர் தலையிடலாம் என சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. ஆகவே, டெல்லி அரசின் தீர்மானங்கள் எதுவும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இன்றி சட்டமாகாது. அதேபோல துணைநிலை ஆளுநரின் முடிவுகளை விசாரிக்க சட்டப்பேரவை அல்லது சட்டப்பேரவைக் குழுக்கள் மூலம் விசாரிக்க முடியாது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின்படி, டெல்லியின் தினசரி நிர்வாகத்துக்காக டெல்லி சட்டப்பேரவை எந்த புதிய தீர்மானத்தையும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் இன்றி உருவாக்க முடியாது. அதேபோல், டெல்லி சட்டப்பேரவை தீர்மானங்கள் எதுவும் மக்களவை விதிகளை மீறக் கூடாது எனவும் மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது.

image

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், டெல்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநர் பைஜலுக்கும் தொடர்ந்து மாநிலத்தின் அதிகாரங்கள் தொடர்பான பிரச்னைகள் நீடித்து வருவது பல்வேறு தருணங்களில் குழப்பத்தை உருவாக்கி வருகிறது.

டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் ஆனார் நஜீப் ஜங் பதவியில் இருந்தபோது அவருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே இதேபோன்ற பிரச்னைகள் இருந்து வந்தன. தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா மூலம் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல்வர், துணைநிலை ஆளுநரை எதிர்த்து செயல்பட வாய்ப்பில்லை.

டெல்லியின் பிரச்சனை இப்படியிருக்க, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணைநிலை ஆளுநரான கிரண் பேடி மற்றும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இடையே தொடர்ந்து முக்கிய முடிவுகள் தொடர்பாக இதேபோன்ற
இழுபறி நீடித்து வந்தது அனைவரும் அறிந்ததே. டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களும் யூனியன் பிரதேச அந்தஸ்தில் இருந்தாலும் தேசிய தலைநகரான டெல்லியை பொறுத்தவரை நிலை சற்று மாறுபடுகிறது. டெல்லியிலே நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம், தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் இருந்து வரும் நிலையில், டெல்லியில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான முடிவுகள் அனைத்தும் மத்திய அரசால் நேரடியாக கவனிக்கப்படுகிறது.

டெல்லி போலீஸ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது. ஆகவே, மத்திய அரசின் பிரதிநிதியான டெல்லியின் துணைநிலை ஆளுநருக்கு டெல்லியில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை பொறுத்தவரை முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் உள்ளது.

அதேபோல டெல்லியில் நிலத்தின் பயன்பாடு தொடர்பான முடிவுகள் டெல்லி டெவலப்மென்ட் அத்தாரிட்டி என்கிற அமைப்பின் மூலமாக மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கண்காணிப்பில் எடுக்கப்படுகின்றன. அதுபோலவே முக்கிய அதிகாரிகளை
இடமாற்றம் செய்வது போன்ற விஷயங்களிலும் டெல்லியின் துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு இல்லாமல் டெல்லி அரசு முடிவுகளை எடுக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றுசூழல் போன்ற பிற துறைகளில் டெல்லி அரசு சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என்பது நீதிமன்ற வழக்குகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சர்ச்சைக்குரிய மசோதா ஒப்புதல் பெற்றால், இந்தத் துறைகளிலும் துணைநிலை ஆளுநர் தலையிட முடியும்.

மக்களவையின் ஒப்புதலை ஏற்கெனவே பெற்றுள்ள இந்த மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி, செய்வ்வாய்கிழமை பலமுறை அவையை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதில் எந்த அளவுக்கு இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு உள்ளது என்பது தெளிவாகிறது.

மக்களவையைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியிலே ஓர் உறுப்பினர் கூட கிடையாது. டெல்லியில் உள்ள அனைத்து 6 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சியே 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரான பகவாந்த் மான் உள்ளிட்டோர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தபோதிலும், மக்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு வலுவான பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் 3 உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் குழு தலைவரான மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்த மசோதா ஜனநாயகத்துக்கு எதிரான மசோதா என்று விமர்சித்துள்ளார்.

இது ஜனநாயக படுகொலை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசுக்கு டெல்லி நிர்வாகம் செய்வதிலேயே உள்ள அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன என்றும் சஞ்சய் சிங் உள்ளிட்ட அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கடுமையாக சாடி, எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

ஏதேனும் ஓர் அவசர சூழ்நிலை ஏற்பட்டால் தனக்கு நேரடியாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவிர பிற துறை சார்ந்த முடிவுகளையும் துணைநிலை ஆளுநர் எடுப்பதற்கு இந்த மசோதா மூலம் வழி செய்யப்பட்டுள்ளது. 'அனைத்து அதிகாரங்களும் துணைநிலை ஆளுநருக்கு என்றால், மக்களால் தேர்வு செய்யப்படும் சட்டசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதல்வர் எதற்கு?'
வெறும் கைப்பாவையாகத்தான் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட முடியம் என கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரிக்கப்பட்டபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த கேஜரிவால் தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத் திருத்தத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கு தேவையான ஆதரவு பா.ஜ.க. அரசுக்கு உள்ளது என்றாலும், இந்த மசோதாவை பொறுத்தவரை கடுமையான எதிர்ப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த எதிர்ப்பை மீறி சர்ச்சைக்குரிய
சட்டத்திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை, பாரதிய ஜனதா கட்சி பெற்றுவிட்டால் அதன்பிறகு டெல்லியிலே துணைநிலை ஆளுநரின் கையே ஓங்கி இருக்கும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிகாரம் மேலும் தேய்ந்து விடும். இந்த நடவடிக்கை பாரதிய ஜனதா கட்சி சர்வாதிகார போக்கு உடைய கட்சி என்ற குற்றச்சாட்டை மேலும்
வலுவடையச் செய்ய வாய்ப்புள்ளது. ஆகவேதான் இந்த மசோதா மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறுமா என்றும் விரைவிலேயே குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்ட திருத்தம் அமலுக்கு வருமா என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

- கணபதி சுப்பிரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்