உலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால், பயனர்கள் அவதிக்கு ஆளாயினர்.
முக்கிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், நேற்றிரவு 10.30 மணியளவில் முடங்கியது. அதைத்தொடர்ந்து முக்கிய சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவையும் செயல்படவில்லை. உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப், திடீரென முடங்கியதால் தகவல்களை பரிமாற முடியாமல் பயனாளர்கள் அவதிக்கு ஆளாயினர்.
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டபின், சுமார் 45 நிமிடங்கள் கழித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கின. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட வாட்ஸ்அப் நிறுவனம், பொறுமையுடன் காத்திருந்த பயனாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3c0BYRNஉலகின் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியதால், பயனர்கள் அவதிக்கு ஆளாயினர்.
முக்கிய தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப், நேற்றிரவு 10.30 மணியளவில் முடங்கியது. அதைத்தொடர்ந்து முக்கிய சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவையும் செயல்படவில்லை. உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப், திடீரென முடங்கியதால் தகவல்களை பரிமாற முடியாமல் பயனாளர்கள் அவதிக்கு ஆளாயினர்.
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டபின், சுமார் 45 நிமிடங்கள் கழித்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை மீண்டும் செயல்படத் தொடங்கின. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட வாட்ஸ்அப் நிறுவனம், பொறுமையுடன் காத்திருந்த பயனாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்