சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
அதிமுக சார்பாக போட்டியிட விரும்புபவர்கள் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுத்து வந்தனர். விருப்ப மனு கொடுப்பதற்கான காலக்கெடு நேற்று மாலையுடன் முடிந்தது. மொத்தம் 8 ஆயிரத்து 240 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் இன்று ஒரே நாளில் நேர்காணலை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நேர்காணல் நடைபெறவுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக சார்பில் போட்டியிட 26 ஆயிரம் பேர் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த முறை 8 ஆயிரத்து 240 பேர் மட்டுமே விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்