80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகள் இன்று முதல் வீடுகளுக்கே சென்று பெறப்பட உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 7 ஆயிரத்து 300 பேர் தபால் முறையில் வாக்களிக்க உள்ளதாகவும், வாக்குகளைப் பெற 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழு நாள் ஒன்றுக்கு 15 பேரிடம் தபால் வாக்குகள் பெற உள்ளதாக கூறிய பிரகாஷ், ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் முழு உடல் கவசத்துடன் சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/39d0EEQ80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தபால் வாக்குகள் இன்று முதல் வீடுகளுக்கே சென்று பெறப்பட உள்ளதாக தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 7 ஆயிரத்து 300 பேர் தபால் முறையில் வாக்களிக்க உள்ளதாகவும், வாக்குகளைப் பெற 70 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குழு நாள் ஒன்றுக்கு 15 பேரிடம் தபால் வாக்குகள் பெற உள்ளதாக கூறிய பிரகாஷ், ரகசியம் காக்கப்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இனி வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் முழு உடல் கவசத்துடன் சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்