காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் கொள்கைகள் ஒன்றுதான் என்றும், மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் நம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் மாஹே மற்றும் ஏனாம் தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 28 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 14 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 14 பெண் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் புதுச்சேரி ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
மேடையில் பேசிய சீமான், "சகிக்க முடியாத ஊழலை செய்து மத்தியில் பிஜேபி ஆட்சியை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கொள்கை ஒன்றுதான்; ஆனால் கட்சிகள் மட்டுமே வேறு. பண மதிப்பு இழப்பீடு தவிர்த்து சிஏஏ, என்.ஆர்.சி, என்.ஜ.ஏ, ஜி.எஸ்.டி, நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. அவற்றை செயல்படுத்தியது பாஜக. பேராபத்தை நோக்கி நாட்டை பாஜக நகர்த்தி கொண்டிருக்கிறார்கள். மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு துணைநிலை ஆளுநராக கிரண்பேடியை அணுப்பி, நாராயணசாமியை படாத பாடு படுத்தியது. இதுவரை ஆட்சி செய்தவர்கள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரவில்லை" என்றார் சீமான்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்