மேற்குவங்கத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்குவங்க மாநிலத்தின் 5 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, கடந்தமுறையைவிட தற்போது மாநிலம் முழுவதும் கூடுதலாக 37% வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டத் தேர்தலுக்காக 10 ஆயிரத்து 288 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையங்களிலும் ஆயிரம் பேர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட உள்ளது. 30 தொகுதிகளில், 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முதல்கட்டத்தேர்தல் நடக்கும் 30 தொகுதிகளில், 27 தொகுதிகள் தற்போது திரிணாமூல் காங்கிரஸ் வசம் உள்ளன. முதல்கட்டத்தேர்தல் நடைபெறும் 5 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் ஒருகாலத்தில் நக்சல் பாதித்த பகுதிகளாக இருந்ததால், பதற்றமான பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில் முதல்கட்டத் தேர்தல் 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேற்கு அசாம் மற்றும் வடக்கு அசாம் பிராந்தியத்தின் 11 மாவட்டங்களில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளிலும், மத்திய அசாமின் நாகான் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வைச்சேர்ந்த 24 பேரும் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த 6 பேரும் உட்பட 264 வேட்பாளர்கள் முதல்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக மொத்தம் 11,537 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில், மொத்தம் 81 லட்சத்து 9 ஆயிரத்து 815 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், அசாம் மாநில முதல்வரான சர்பானந்த் சோனாவால் போட்டியிடும் மஜூலி தொகுதியும் ஒன்று. அசாம் தேர்தலை பொருத்தமட்டில் தேசிய குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் ஊதியம் போன்றவை முக்கிய பிரச்னைகளாக பார்க்கப்படுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vWNMMKமேற்குவங்கத்தின் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாம் மாநிலத்தின் 47 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்