தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் அதிகாலை 6 மணி வரை பதிவேற்றப்பட்ட விவரங்களின் படி, தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 81 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 6 ஆயிரத்து 34 பேர் ஆண்கள், ஆயிரத்து 44 பேர் பெண்கள் ஆவர். மயிலாப்பூரில் ஒருவர், மதுரை தெற்கில் இருவர் என மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக வானூர், குன்னூர், திருச்சி மேற்கு, பவானி சாகர் ஆகிய தொகுதிகளில் தலா 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடியில் 48, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூரில் 51 என வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கும் கொளத்தூரில் 55 மனுக்களும், டிடிவி தினகரன் களமிறங்கியுள்ள கோவில்பட்டியில் 44 வேட்பு மனுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கமல்ஹாசன் களத்தில் உள்ள கோவை தெற்குத் தொகுதியில் 33 மனுக்களும், சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் 32 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/310qgjWதமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. தேர்தல் ஆணைய இணையத்தளத்தில் அதிகாலை 6 மணி வரை பதிவேற்றப்பட்ட விவரங்களின் படி, தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 81 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 6 ஆயிரத்து 34 பேர் ஆண்கள், ஆயிரத்து 44 பேர் பெண்கள் ஆவர். மயிலாப்பூரில் ஒருவர், மதுரை தெற்கில் இருவர் என மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் வேட்பு மனு அளித்துள்ளனர்.
அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 97 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக வானூர், குன்னூர், திருச்சி மேற்கு, பவானி சாகர் ஆகிய தொகுதிகளில் தலா 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடியில் 48, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூரில் 51 என வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களத்தில் இருக்கும் கொளத்தூரில் 55 மனுக்களும், டிடிவி தினகரன் களமிறங்கியுள்ள கோவில்பட்டியில் 44 வேட்பு மனுகள் அளிக்கப்பட்டுள்ளன.
கமல்ஹாசன் களத்தில் உள்ள கோவை தெற்குத் தொகுதியில் 33 மனுக்களும், சீமான் போட்டியிடும் திருவொற்றியூரில் 32 வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்