Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“வேறு கட்சிக்கு மாறுகிறேனா; எல்லாமே வதந்தி” - காங். எம்.எல்.ஏ விஜயதாரணி

https://ift.tt/2OU8ETK

தான் வேறு கட்சிக்கு மாறுகிறேன் என்பது வதந்தி என விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிட வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 21 பேர் பட்டியல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மீதமுள்ள 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் புதுவையில், காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும்' - காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்– News18 Tamil

விளவங்கோட்டில் விஜயதாரணிக்கும், குளச்சலில் பிரின்ஸுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கக்கூடாது என கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கூறும்போது, “அறிவிக்கப்படாத 4 தொகுதிகளுக்கும் இன்று அறிவிப்பு வெளியாகலாம். சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கக்கூடிய என்னுடைய தொகுதி மட்டும் வெயிட்டிங்கில் இல்லை. குளச்சலிலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெறும் 10 பேர் எதிர்ப்பு தெரிவிப்பதை வைத்து எந்த கட்சி தலைமையும் முடிவு எடுக்காது. கட்சி மேலிடம் சரியான பார்வையை செலுத்தும் என நம்புகிறேன். விளவங்கோடு தொகுதியில் எனக்கு மீண்டும் நிச்சயம் வாய்ப்பு வழங்குவார்கள். காங்கிரஸ் தலைமை மீது எனக்கு அதிருப்தி என்பதும் நான் வேறு கட்சிக்கு போவதாகவும் வெளியாகும் செய்தி வதந்தி. கட்சி அறிவிப்பு வெளியிடும்வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

எனது தொகுதியில் மக்களோடு இணைந்து நன்றாக வேலைப்பார்த்துள்ளேன். மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுத்துள்ளேன். காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டு காலமாக ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ நான்தான்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்