மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முடிந்தால் மம்தா பானர்ஜி போட்டியிட்டு ஜெயித்துக் காட்டட்டும் என்று பாஜகவினர் சவால் விட்ட தொகுதி தான் நந்திகிராம். மம்தாவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது இந்தத் தொகுதியில் தான். 2007ஆம் ஆண்டு அரசு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த அப்போதைய கம்யூனிஸ்ட் அரசு முயற்சி செய்யது. மம்தா பானர்ஜி அதனை எதிர்த்து நின்றார். அந்த போராட்டம் கலவரமாக மாறி 14 பேர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். அதிலிருந்துதான் மம்தா பானர்ஜியின் அரசியல் செயல்பாடுகள் சூறாவளி வேகத்தில் தொடங்கியது.
மம்தா பானர்ஜியின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த சுவெந்து அதிகாரி சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதாவில் தம்மை இணைத்துக் கொண்டார். அவர் செல்வாக்கை நிரூபிக்க, தனது சொந்த தொகுதியான நந்திகிராமிலும், கடந்த 10 ஆண்டுகளாக மம்தா பானர்ஜியின் கோட்டையாக விளங்கும் பவானிபூரிலும் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதை உறுதிபடுத்தும் விதமாக, பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜயவார்கியா, தைரியமிருந்தால் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடடும் என சவால் விடுத்தார். ஏனென்றால் நந்திகிராம் தொகுதியில் சுவெந்து அதிகாரி கடந்த முறை 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
தமது சொந்தத் தொகுதியான பவானிபூர், நந்திகிராம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மம்தா பானர்ஜி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நந்திகிராம் தொகுதியில் மட்டும் போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு அதிரடி காட்டியிருக்கிறார் மம்தா.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட பாஜக தனக்கு வாய்ப்பு அளித்தால் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன், இல்லையென்றால் அரசியலை விட்டு விலகுவேன் என கடந்த ஜனவரி மாதம் சுவேந்தி அதிகாரி பேசியிருந்தார். இதனால் ஐந்து மாநில தேர்தல்களில் நட்சத்திர தொகுதியாக மாறி இருக்கிறது நந்திகிராம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்