கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆவின் பால் பாக்கெட்டில் தவளை மிதந்துக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை தெருவை சேர்ந்தவர் சிவநேசன். இவர் நேற்று மாலை, திருக்கோவிலூர் தெற்கு தெருவில் உள்ள பாஸ்கர் என்பவர் நடத்திவரும் ஆவின் பாலகத்தில், பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர், வீட்டிற்கு சென்று பால் பாக்கெட்டை பிரித்தபோது, அந்த பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் தவளை ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சிவநேசன் ஆவின் பாலக முகவர் பாஸ்கரிடம் முறையிட்டுள்ளார். பின்னர், இத்தகவலை ஆவின் பாலக முகவர் பாஸ்கரன், விழுப்புரம் மாண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் தெரிவித்ததை அடுத்து, தவளை இருந்த பால் பாக்கெட்டை வாங்கி சென்ற சிவநேசன் என்பவரது வீட்டில் ஐயங்கரன் நேரில் விசாரணை மேற்கொண்டார். தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்தது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3sPb1Gf

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்