தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவும் திமுகவும் தங்களது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன. இதனிடையே, கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி, அங்கிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கடிதத்தை முக்குலத்தோர் புலிப்படையின் இளைஞர் அணிச் செயலாளர் அஜய் வண்டையார், திமுகவின் ஆர்.எஸ் பாரதியிடம் வழங்கினார். பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக ஏற்றுக்கொண்டால், முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3cciLv7

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்