மகனை காணவில்லை என போலீசாரிடம் புகார் கொடுத்த தாயையே போலீசார் கைது செய்துள்ளனர். 6 வயது மகனை கொன்றுவிட்டு காணவில்லை என நாடகம ஆடியதை போலீசார் ஆதாரத்துடன் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்தின் மிடில்டவுன் காவல்நிலையத்துக்கு சென்ற கோஸ்னே (29) என்ற பெண்ணும், அவரது காதலரும் பரபரப்பாக புகார் ஒன்றை பதிவு செய்தனர். தன்னுடைய 6 வயது மனனை சனிக்கிழமை முதல் காணவில்லை. உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென்றும் கூறியுள்ளனர். சிறுவனை காணவில்லை என்றதும் துரிதமாக செயல்பட்ட காவலர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். திங்கள்கிழமை காலை தாய் கோஸ்னேவையும், அவரது காதலர் ஜேம்ஸையும் போலீசார் கைது செய்துள்ளனர். 6 வயது மகனை கொன்றுவிட்டு காணவில்லை எனநாடகம் ஆடியதாக ஆதாரத்தை நீட்டியுள்ளனர் போலீசார்.
வீட்டில் இருந்து 35கிமீ தூரத்தில் இருக்கும் ஒரு பூங்காவுக்கு 6வயது மகனை அழைத்துச் சென்ற கோஸ்னே அவனை அங்கேயே விட்டுவிட்டு வந்துள்ளார். சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் பூங்கா சென்ற அவர் மகனின் உடலை மட்டுமே எடுத்துவந்துள்ளார். புகார் அளிப்பதற்கும் இரண்டு நாட்கள் முன்பே மகனின் உடலை அங்கேயுள்ள ஒரு ஆற்றில் வீசியுள்ளனர். ஒருநாள் கழித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் கொண்டு கொலையை கண்டுபிடித்த போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு பின் கொலையை ஒப்புக்கொண்ட கோஸ்னே, கொலை செய்தது ஏன் தெரிவிக்கவில்லை.
சிறுவனின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுறுசுறுப்பான துடிப்பான சிறுவனை கொலை செய்தது ஏனோ? என சிறுவனின் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மகனை கொலை செய்தவருக்கு உரிய தண்டனை வழங்கவேண்டுமென தந்தை லீவிஸ் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்