மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த மறைந்த காடுவெட்டி குருவின் மகனான கனலரசனின் மாவீரன் மஞ்சள் படை அமைப்பு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை இந்திய ஜனநாயக கட்சியுடன் ஒருங்கிணைந்து சந்திக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து கூறும் போது, “குருவின் ஆதரவாளர்களும் வன்னியர் பெருமக்களும் இந்த தேர்தலில் தங்களது கட்சிக்கு மாபெரும் வெற்றியை தரவேண்டும்.நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொள்ள இருப்பதால் போட்டியிட முடியாத சூழ்நிலை உள்ளது. வரும் நாட்களில் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவேன். தங்கள் கூட்டணியில், இலவசங்களை அறிவிக்க மாட்டோம். அதே நேரத்தில் மக்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடிய வகையில் ஒரு சூழலை உருவாக்குவோம்.” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்