மார்ச் 10 ம் தேதி நந்திகிராமில் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, முதல்வர் மம்தா பானர்ஜியின் காலில் கார் கதவு மோதியதாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜியின் காலில் ஏற்பட்ட காயம் குறித்து, பாஜகவை திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது. இது முழுக்க அனுதாப வாக்குகளைப் பெறுவதற்கான நாடகம், இது எந்த முடிவையும் தராது என்று பாஜக மேற்கு வங்க தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள எஸ்.கே.கே.எம் மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்ற பிறகு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது தொடர்பாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் தனது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வெள்ளிக்கிழமை மாலை சமர்ப்பித்தார். கார் கதவால் காயம் ஏற்பட்டது என்று கூறும்போது, மம்தா பானர்ஜியின் காலில் கதவு அறைந்ததற்கு என்ன காரணம் என்று அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. டி.எம்.சி குற்றம் சாட்டியபடி, சில நபர்கள் வேண்டுமென்றே கார் கதவை மூடிவிட்டார்களா இல்லையா என்பதையும் அறிக்கையில் குறிப்பிடவில்லை.
முன்னதாக வெள்ளிக்கிழமை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பூபிந்தர் யாதவ் தலைமையிலான பாஜக தலைவர்கள் குழு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தது. மம்தா பானர்ஜியின் காலில் ஏற்பட்ட காயம் "அரசியல் சதியின்" விளைவாக இருப்பதாக குற்றம் சாட்டினார்கள்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுடன் உரையாடிய பாஜக எம்.பி பூபிந்தர் யாதவ், இந்த சம்பவம் குறித்த வீடியோவை தேர்தல் ஆணையத்திற்கு பிரதிநிதிகள் குழு அளித்து, அதை பகிரங்கப்படுத்துமாறு கேட்டுக்கொண்டது. "நந்திகிராம் மற்றும் பிற முக்கிய தொகுதிகளில் தேர்தல் ஆணைய சிறப்பு பார்வையாளர்கள் இருக்க வேண்டும்" என்று பூபிந்தர் யாதவ் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்