ஆளும் அதிமுக பண மூட்டையை நம்பி தேர்தலில் நிற்பதாகவும், திமுக எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பதற்கு பகல் கனவு காண்பதாகவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் வேட்பாளர் மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் பெருமாள், உத்திரமேரூர் வேட்பாளர் ரஞ்சித் குமார் ஆகியோரை ஆதரித்து டிடிவி தினகரன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது பேசியது:
"நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். ஆனால், துரோகக் கட்சியான ஆளுங்கட்சியோ பண மூட்டைகளை நம்பி தேர்தலில் நிற்கிறது. ஏனென்றால், கடந்த ஐந்து வருடங்களாக ஆட்சியில் இருந்து மக்கள் பணத்தை என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதையெல்லாம் மக்களிடத்தில் கொடுத்து எப்படியாவது வாக்குகளைப் பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களாகிய நாமெல்லாம் ஏமாளிகள்; ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு, வாக்கு அளித்து விடுவோம் என்று நினைத்துக்கொண்டு தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்று தெரியும். நிச்சயம் அவர்கள் தோல்வியைத் தழுவி விடுவார்கள்.
அதுபோல 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத ஏக்கத்தில் பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறது திமுக கூட்டணி. எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும்; தமிழ்நாட்டு செல்வத்தையெல்லாம் சுரண்டிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
உண்மையான அம்மாவின் ஆட்சி, எல்லோரும் எதிர்பார்க்கின்ற நல்லாட்சி. எல்லா சமுதாயமும் இங்கே சமநீதி பெற்று வாழ்கின்ற ஆட்சி. இங்கே ஒரு சமுதாயத்திற்கு ஒரு கண்ணில் வெண்ணெயும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கின்ற ஆட்சி என்றைக்கும் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து சமுதாய மக்களும் சமநீதி பெற்று வாழவேண்டும் என்பதுதான் ஒரு ஆட்சியின் கருத்தாக இருக்கவேண்டும். அந்த முறையிலேயே தமிழ்நாட்டிலே ஒரு சிறந்த நல்லாட்சியை, வெளிப்படையான ஆட்சியை, ஊழலற்ற ஆட்சியை லஞ்ச லாவண்யம் அற்ற ஆட்சியை, வளர்ச்சியை நோக்கி ஆட்சியை நாங்கள் தருவோம்.
தமிழ்நாட்டிலே இன்றைக்கு ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் கடனில் இருக்கிறது. ஆனால், ஆளுங்கட்சியோ குடும்பத்தலைவிகளை ஏமாற்றுகிற வகையில், ஒவ்வொருவருடைய அக்கவுண்டிலும் 1500 ரூபாய் பணம் போடுகிறேன் என்று சொல்கிறார்கள். எதிர்க்கட்சியோ ரூ.1000 போடுவோம் என்று சொல்கிறது. 7 லட்சம் கோடி கடனை எப்படி கட்டுவது என்று எல்லோரும் தள்ளாடி கொண்டிருக்கிறோம். முதியோர் உதவி தொகையை கூட ஏன் இவர்களால் ஒழுங்காக கொடுக்க முடியவில்லை?
மக்களை ஏமாற்றி எப்படியாவது ஆட்சிக்கு வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். ஆகவே, யாரும் இதில் ஏமாந்து விடக்கூடாது" என்றார் டிடிவி தினகரன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்