சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகி கொள்ளத் தயார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்... அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி வருவதால் என்னுடைய இமேஜ் பாதிக்கப்படுகிறது.
எனது சொந்து மதிப்பு குறித்து வேட்புமனுவில் வெளிப்படையாக குறிப்பட்டு உள்ளேன். எனவே மாணிக்கராஜா தான் கூறிய கருத்தை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன். சிங்கப்பூர் இதுவரை சென்றது இல்லை, மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் கலந்து கொண்டேன். அவர் கூறும் இருநாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள தயார்.
வாக்காளித்த மக்களுக்கு தொகுதி முழுவதும் சுற்றி பணி செய்பவர்தான் உண்மையான அரசியல்வாதி. சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு உள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது டிடிவி.தினகரன் கட்சி நிர்வாகி தான். இங்கேயே குடியிருக்க மாட்டேன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறியவரை அழைத்து வந்து கோவில்பட்டியில் போட்டியிட வைத்திருக்கிறார்.
ஒருவேளை வெற்றி பெற்றால் ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும். தேர்தல் களம் என்றால் எதையும் சந்திக்க அதிமுக தயராக உள்ளது. திமுகவிற்காக தான் நில அபகரிப்பு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். திமுகவில் இருப்பது குடும்ப ஆட்சி. அதிமுக ஆட்சிக்காலத்தில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகும் நிலை உள்ளது.
கருத்துக்கணிப்புகளில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தேன் என்று மக்களுக்கு தெரியும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் முன் பட்டாசு வெடித்த விவாகரத்தைத் தொடர்ந்து 25 ஆயிரம் வாக்குகள் எனக்கு கூடிவிட்டது. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால் தற்போது தஎன்னை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழந்து விடும் நிலை உள்ளது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2NUbSqqசிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகி கொள்ளத் தயார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கோவில்பட்டி அன்னை தெரசா நகர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்... அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினரகனுக்கு ஆதவராக தேர்தல் பரப்புரை செய்யும் அக்கட்சியின் தென்மண்டல அமைப்பாளர் மாணிக்கராஜா, எனக்கு சிங்கப்பூர், மலேசியாவில் ஹோட்டல்கள் இருப்பதாக மக்களிடம் உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி வருவதால் என்னுடைய இமேஜ் பாதிக்கப்படுகிறது.
எனது சொந்து மதிப்பு குறித்து வேட்புமனுவில் வெளிப்படையாக குறிப்பட்டு உள்ளேன். எனவே மாணிக்கராஜா தான் கூறிய கருத்தை வாபஸ் பெறவேண்டும். இல்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்வேன். சிங்கப்பூர் இதுவரை சென்றது இல்லை, மலேசியாவில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அரசு சார்பில் கலந்து கொண்டேன். அவர் கூறும் இருநாடுகளில் எனக்கு பெட்டிக்கடை கூட கிடையாது. அப்படி இருப்பதை நிரூபித்தால், நாளைக்கே தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள தயார்.
வாக்காளித்த மக்களுக்கு தொகுதி முழுவதும் சுற்றி பணி செய்பவர்தான் உண்மையான அரசியல்வாதி. சிங்கப்பூரில் குடியுரிமை பெறுவது தொடர்பாக டிடிவி தினகரன் மீது வழக்கு உள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது டிடிவி.தினகரன் கட்சி நிர்வாகி தான். இங்கேயே குடியிருக்க மாட்டேன் சிங்கப்பூர் செல்கிறேன் என்று கூறியவரை அழைத்து வந்து கோவில்பட்டியில் போட்டியிட வைத்திருக்கிறார்.
ஒருவேளை வெற்றி பெற்றால் ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டுமானல் சிங்கப்பூருக்குதான் செல்ல வேண்டும். தேர்தல் களம் என்றால் எதையும் சந்திக்க அதிமுக தயராக உள்ளது. திமுகவிற்காக தான் நில அபகரிப்பு சட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். திமுகவில் இருப்பது குடும்ப ஆட்சி. அதிமுக ஆட்சிக்காலத்தில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகும் நிலை உள்ளது.
கருத்துக்கணிப்புகளில் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தேன் என்று மக்களுக்கு தெரியும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் முன் பட்டாசு வெடித்த விவாகரத்தைத் தொடர்ந்து 25 ஆயிரம் வாக்குகள் எனக்கு கூடிவிட்டது. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால் தற்போது தஎன்னை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழந்து விடும் நிலை உள்ளது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்