Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!

21 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்கிக் கொண்டு வந்து மனு அளித்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளான தாய்க்கு, தனது சொந்த செலவில் சொகுசு இருக்கையுடன் கூடிய இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுத்துள்ளார், மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன். 

மதுரை ஆனையூர் பகுதி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த காளிமுத்து - மாரீஸ்வரி தம்பதியினருக்கு ஒரு மகனும்,  ஒரு மகளும் இருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களது மகள் 11-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு மகனான 21 வயதான பழனிகுமார் பிறவியிலேயே வாய் பேச முடியாமலும், நடக்க முடியாமலும் மாற்றுத்திறனாளியாக இருந்து வருகிறார்.

கூலித்தொழிலாளர்களான காளிமுத்து - மாரீஸ்வரி தம்பதியினர், தங்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த வருவாயைக் கொண்டு தனது மாற்றுத்திறனாளி மகனை வளர்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் ரத்த புற்றுநோய் பாதிப்புக்குள்ளான மாரீஸ்வரி, தனக்கும் தனது மகனுக்கும் மருந்து மாத்திரை, உணவுக்கு போதிய வருவாயின்றி தவித்து வந்துள்ளார். அவரது கணவர் காளிமுத்து குடிபோதைக்கு அடிமையாக இருப்பதால் அவரால் குடும்பத்திற்கு எந்த உதவியும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக நடக்க முடியாத மகனை யாரை நம்பியும் வீட்டில் விட்டு செல்ல முடியாமல் எங்கு சென்றாலும் தனது இடுப்பிலேயே தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.

image

வறுமையினாலும், குடும்பச்சூழலினாலும் பரிதவித்து வந்த மாரீஸ்வரி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னால், 21 வயதான மாற்றுத்திறனாளி மகனை தூக்கி செல்ல முடியவில்லை எனவும் தனக்கு இருசக்கர வாகனம் அரசு வழங்கினால் பெரும் உதவியாக இருக்குமெனவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் கடந்த சில மாதங்களுக்கு முன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தனது சொந்த செலவில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கியதுடன்,  21 வயதான மாற்றுத்திறனாளியான மாரீஸ்வரி மகன் பழனிகுமாரை அமரவைத்து செல்லும் வகையில் காரில் உள்ளபடி சீட் பெல்டுடன் பிரத்யேகமாக வடிவமைத்து  அந்த வாகனத்தை இன்று ஆட்சியர் வழங்கினார்.

அந்த வாகனத்திலேயே மாற்றுதிறனாளியான பழனிக்குமார் அமரவைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு ரவுன்ட் ஓட்டிக் பழனிகுமாரை உற்சாகப்படுத்தினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு மாரீஸ்வரியும் அவரது மகனும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3uOHdvd

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்