திமுகவினர் மற்றும் அதிமுகவினர் தேர்தல் விளம்பரத்திற்கு பயன்படுத்திய துண்டு பிரச்சுரங்களில் ஒரே பெண் இடம் பெற்றது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற விருக்கும் நிலையில், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை தயாரிக்க திமுகவிற்கு சென்னையை தலைமையிடமாகக் கொண்டும், அதிமுகவிற்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டும் பல்வேறு குழுக்கள் இயங்கிவருகின்றன. இந்தக்குழுக்கள் திமுக மற்றும் அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கும் நோக்கத்துடன் துண்டு பிரசுரங்களை தனித்தனியாக தயாரித்து வெளியிடுகின்றன.
இந்தநிலையில் தற்போது திராவிட கட்சிகள் வெளியிட்ட துண்டு பிரசுரங்களில் ஒரே பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது வாக்களார்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுகவினர் கூறும்போது, “ கடந்த மார்ச் 7-ஆம் தேதி திருச்சியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தின்போது திமுக இந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டது” என்றனர்.
அதிமுகவினர் கூறும்போது, “ கடந்த ஜனவரி மாதம் பருவ இதழ் ஒன்றுக்கு கொடுத்த விளம்பரத்தில், நாங்கள்தான் இந்தப்படத்தை முதலில் பயன்படுத்தினோம்” என்றனர்.
உண்மை நிலவரத்தை ஆராய்ந்தபோது, இரு கட்சிகளும் www.shutterstock.com என்ற இணையத்தளத்தில் Tamil woman என்று தேடினால், முதலில் வரும் பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இணையதளங்களில் ஒரு பெண்ணின் படத்தை பதிவிறக்கம் செய்து விளம்பரத்தில் பயன்படுத்த குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும். அந்தப்படத்தை அனைவரும் பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் குறைவு.குறிப்பிட்ட ஒரு நிறுவனம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் அதிகம். அதனடிப்படையில் தேர்தல் செலவை குறைந்த அதிமுகவும், திமுகவும் முதல் முறையை பயன்படுத்தி தேர்தல் செலவை குறைக்க முனைந்திருப்பது தெரியவந்துள்ளது.
- லெனின்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lAXjUVதிமுகவினர் மற்றும் அதிமுகவினர் தேர்தல் விளம்பரத்திற்கு பயன்படுத்திய துண்டு பிரச்சுரங்களில் ஒரே பெண் இடம் பெற்றது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற விருக்கும் நிலையில், தேர்தல் தொடர்பான விளம்பரங்களை தயாரிக்க திமுகவிற்கு சென்னையை தலைமையிடமாகக் கொண்டும், அதிமுகவிற்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டும் பல்வேறு குழுக்கள் இயங்கிவருகின்றன. இந்தக்குழுக்கள் திமுக மற்றும் அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்கும் நோக்கத்துடன் துண்டு பிரசுரங்களை தனித்தனியாக தயாரித்து வெளியிடுகின்றன.
இந்தநிலையில் தற்போது திராவிட கட்சிகள் வெளியிட்ட துண்டு பிரசுரங்களில் ஒரே பெண்ணின் புகைப்படம் இடம் பெற்றிருப்பது வாக்களார்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுகவினர் கூறும்போது, “ கடந்த மார்ச் 7-ஆம் தேதி திருச்சியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தின்போது திமுக இந்த துண்டு பிரசுரத்தை வெளியிட்டது” என்றனர்.
அதிமுகவினர் கூறும்போது, “ கடந்த ஜனவரி மாதம் பருவ இதழ் ஒன்றுக்கு கொடுத்த விளம்பரத்தில், நாங்கள்தான் இந்தப்படத்தை முதலில் பயன்படுத்தினோம்” என்றனர்.
உண்மை நிலவரத்தை ஆராய்ந்தபோது, இரு கட்சிகளும் www.shutterstock.com என்ற இணையத்தளத்தில் Tamil woman என்று தேடினால், முதலில் வரும் பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
இணையதளங்களில் ஒரு பெண்ணின் படத்தை பதிவிறக்கம் செய்து விளம்பரத்தில் பயன்படுத்த குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்த வேண்டும். அந்தப்படத்தை அனைவரும் பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் குறைவு.குறிப்பிட்ட ஒரு நிறுவனம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் அதிகம். அதனடிப்படையில் தேர்தல் செலவை குறைந்த அதிமுகவும், திமுகவும் முதல் முறையை பயன்படுத்தி தேர்தல் செலவை குறைக்க முனைந்திருப்பது தெரியவந்துள்ளது.
- லெனின்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்