தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக தனது கூட்டணிக்கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதன்படி முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 12 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்பட்டது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 15 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என அதிமுக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் எனவும், குறைந்தது 20 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் எனவும் தேமுதிக கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. விஜயகாந்த் போட்டியிடாததால் தேமுதிக வாங்கு வங்கி குறைவாக இருப்பதை காரணம் காட்டி, அதிமுக அதிக தொகுதிகள் ஒதுக்க மறுத்து வருகிறது. எனவே, 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் செல்லாமலேயே புறக்கணித்து வருகின்றனர்.
தேமுதிகவுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிகவினர் அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளனர். அதிமுக மீது தேமுதிகவினர் அதிருப்தியில் இருப்பதால் இந்தக் கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே அதிமுக உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை எனக் கூறி சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யத்துடனும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிருப்தியில் இருக்கும் தேமுதிகவும் மக்கள் நீதி மய்யத்துடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “அதிமுக தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் தர முன்வந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இருப்பதுதான் புத்திசாலித்தனமான முடிவு. ஏனென்றால், இப்போது வேறு கூட்டணிக்கு போனால், அங்கு இதைவிட குறைவான இடங்கள்தான் கிடைக்கும். அது கவுரமான அளவுக்கு இருக்குமா என்று பார்க்க வேண்டும். திமுக பக்கம் வாய்ப்பு இருந்தால் தேமுதிக, அதிமுகவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். அங்கு இல்லையென்றால் பிறகு கமல்ஹாசனின் மநீம-வுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், அங்கு அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்காது. ஓரளவுக்கு கூடுதல் இடங்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். இந்த நேரத்தில் சின்ன சின்ன பிரச்னைகளுக்காக ஒரு தவறான முடிவை அந்த கட்சி எடுக்கக்கூடாது” என்றார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் கணபதி கூறுகையில், “தேமுதிகவை பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே சூழ்நிலை ஏற்பட்டது. பாமக முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவிடம் குறிப்பிட்ட தொகுதிகளை வாங்கிவிட்டார்கள். அப்போது அதிமுக - திமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த முறை அது நிகழக் கூடாது என பேச்சுவார்த்தையை முன்கூட்டியே ஆரம்பிக்க வேண்டும் என பிரேமலதா வலியுறுத்திவந்தார். தேமுதிக கேட்கும் இடங்கள் கண்டிப்பாக கிடைக்காது. காரணம், அக்கட்சியின் வாக்கு வங்கி, விஜயகாந்தின் உடல்நிலை ஆகியவை கவனத்தில் கொள்ளப்படுகிறது. திமுகவுக்கு சென்றாலும் அவர்கள் எதிர்ப்பார்க்கும் இடங்கள் கிடைக்காது. மூன்றாவது அணிக்கு செல்லவும் தேமுதிகவுக்கு வாய்ப்பில்லை. எனவே, அதிமுகவுடன் சமரசமாக போவதுதான் தேமுதிகவுக்கு ஒரே வழி” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “2011-ஆம் ஆண்டில் விஜயகாந்தின் தேமுதிகவாக இருந்தது. ஆனால் இப்போது பிரேமலதா தேமுதிகவாக இருக்கிறது. இது அதிமுகவிற்கு நன்றாகவே தெரியும். கடந்த 3 தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துகொண்டே வருவதையும் பார்க்கிறார்கள். அதனால் அதிமுக எவ்வளவு இடங்கள் கொடுக்கிறார்களோ, அதை வாங்கிக்கொண்டு தேர்தலை சந்திப்பதுதான் தேமுதிகவிற்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்பது எனது கணிப்பு” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3bSwwPsதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதிமுக தனது கூட்டணிக்கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதன்படி முதல்கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 12 தொகுதிகள் ஒதுக்குவதாக கூறப்பட்டது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் 15 தொகுதிகள் வரை தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என அதிமுக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் எனவும், குறைந்தது 20 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் எனவும் தேமுதிக கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. விஜயகாந்த் போட்டியிடாததால் தேமுதிக வாங்கு வங்கி குறைவாக இருப்பதை காரணம் காட்டி, அதிமுக அதிக தொகுதிகள் ஒதுக்க மறுத்து வருகிறது. எனவே, 3-ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் செல்லாமலேயே புறக்கணித்து வருகின்றனர்.
தேமுதிகவுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என தேமுதிகவினர் அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளனர். அதிமுக மீது தேமுதிகவினர் அதிருப்தியில் இருப்பதால் இந்தக் கூட்டணி நிலைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே அதிமுக உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை எனக் கூறி சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யத்துடனும் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிருப்தியில் இருக்கும் தேமுதிகவும் மக்கள் நீதி மய்யத்துடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் கூறுகையில், “அதிமுக தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் தர முன்வந்திருந்தால், அதை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் இருப்பதுதான் புத்திசாலித்தனமான முடிவு. ஏனென்றால், இப்போது வேறு கூட்டணிக்கு போனால், அங்கு இதைவிட குறைவான இடங்கள்தான் கிடைக்கும். அது கவுரமான அளவுக்கு இருக்குமா என்று பார்க்க வேண்டும். திமுக பக்கம் வாய்ப்பு இருந்தால் தேமுதிக, அதிமுகவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தலாம். அங்கு இல்லையென்றால் பிறகு கமல்ஹாசனின் மநீம-வுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், அங்கு அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்காது. ஓரளவுக்கு கூடுதல் இடங்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். இந்த நேரத்தில் சின்ன சின்ன பிரச்னைகளுக்காக ஒரு தவறான முடிவை அந்த கட்சி எடுக்கக்கூடாது” என்றார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் கணபதி கூறுகையில், “தேமுதிகவை பொறுத்தவரை, கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே சூழ்நிலை ஏற்பட்டது. பாமக முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவிடம் குறிப்பிட்ட தொகுதிகளை வாங்கிவிட்டார்கள். அப்போது அதிமுக - திமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த முறை அது நிகழக் கூடாது என பேச்சுவார்த்தையை முன்கூட்டியே ஆரம்பிக்க வேண்டும் என பிரேமலதா வலியுறுத்திவந்தார். தேமுதிக கேட்கும் இடங்கள் கண்டிப்பாக கிடைக்காது. காரணம், அக்கட்சியின் வாக்கு வங்கி, விஜயகாந்தின் உடல்நிலை ஆகியவை கவனத்தில் கொள்ளப்படுகிறது. திமுகவுக்கு சென்றாலும் அவர்கள் எதிர்ப்பார்க்கும் இடங்கள் கிடைக்காது. மூன்றாவது அணிக்கு செல்லவும் தேமுதிகவுக்கு வாய்ப்பில்லை. எனவே, அதிமுகவுடன் சமரசமாக போவதுதான் தேமுதிகவுக்கு ஒரே வழி” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், “2011-ஆம் ஆண்டில் விஜயகாந்தின் தேமுதிகவாக இருந்தது. ஆனால் இப்போது பிரேமலதா தேமுதிகவாக இருக்கிறது. இது அதிமுகவிற்கு நன்றாகவே தெரியும். கடந்த 3 தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு வங்கி குறைந்துகொண்டே வருவதையும் பார்க்கிறார்கள். அதனால் அதிமுக எவ்வளவு இடங்கள் கொடுக்கிறார்களோ, அதை வாங்கிக்கொண்டு தேர்தலை சந்திப்பதுதான் தேமுதிகவிற்கு நல்வாய்ப்பாக இருக்கும் என்பது எனது கணிப்பு” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்