உதட்டளவில் மட்டுமே சேவை செய்யக் கூடியவர் கமல்ஹாசன் என கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனல் பரக்க அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளருமான வானதி சீனிவாசன் ‘துக்கடா அரசியல்வாதி; என மக்கள் நீதி மைய தலைவரும் நடிகருமான கமலஹாசன் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட சொர்ணாம்பிகா லே-அவுட் பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன்," நான் இதுவரை மக்களுக்கான சேவைகளை மட்டுமே செய்து வருகிறேன். என்னால் தொகுதி மக்களுக்கு அனைத்து திட்டங்களையும் மத்திய மாநில அரசுகளிடம் பேசி கொண்டு வர முடியும். நேற்று கட்சி துவங்கிய கமலஹாசன் பிரதமர் மோடியுடன் நேரடி விவாதம் செய்ய வேண்டுமா? உலகிலேயே பெரிய கட்சி பாஜக என்றார்.
மேலும் கமல்ஹாசன் விமர்சனம் குறித்து பேசிய அவர், “ என்னை துக்கடா அரசியல்வாதி என்று கூறிய கமல்ஹாசன் இதுவரை மக்களுக்கு என்ன சேவை செய்தார். இதுவரை அவர் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வந்துள்ளார். உதட்டளவிலும் உதடுகளுக்கும் மட்டுமே சேவை செய்து வந்தவர் கமலஹாசன்” என்று விமர்சித்தார் .
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்