அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகளும் தங்களது தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யும் கட்டத்தில் இருப்பதால் தமிழக தேர்தல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது.
அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதியும், பாஜகவுக்கு 20 தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டன. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்து வைத்த அதிமுக, தேமுதிக, தமாகா, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இறுதியான தொகுதி பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு 15 இடங்களையும், தமாகாவுக்கு 5 இடங்களையும், பிற கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களையும் ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், திமுக கூட்டணியில், பெரும்பாலான கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது போல்தான், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்க முடியும் என திமுக உறுதிபட கூறியதாகத் தெரிகிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று இறுதியாகும் எனவும் தெரிய வருகிறது.
இதே போன்று, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில் தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3br0J9oஅதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகளும் தங்களது தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்யும் கட்டத்தில் இருப்பதால் தமிழக தேர்தல் களம் இன்னும் சூடுபிடித்துள்ளது.
அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதியும், பாஜகவுக்கு 20 தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டன. கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்து வைத்த அதிமுக, தேமுதிக, தமாகா, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால், இறுதியான தொகுதி பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு 15 இடங்களையும், தமாகாவுக்கு 5 இடங்களையும், பிற கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களையும் ஒதுக்கீடு செய்ய அதிமுக முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், திமுக கூட்டணியில், பெரும்பாலான கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது போல்தான், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்க முடியும் என திமுக உறுதிபட கூறியதாகத் தெரிகிறது. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று இறுதியாகும் எனவும் தெரிய வருகிறது.
இதே போன்று, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக், முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்நிலையில் தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்