Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நாகை தொகுதியை வெல்லப்போவது யார்?- ஓர் அலசல்

https://ift.tt/3ffNrPq

நாகை மாவட்டத்தில் முக்கியமான தொகுதியான நாகை தொகுதியை கைப்பற்றுவதில் அதிமுக, விசிக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

நாகை சட்டப்பேரவை தொகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் பிரதானமாக உள்ளது. தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. சோழர் காலம் முதல் பயணிகள், சரக்கு போக்குவரத்து என இயங்கிய துறைமுகம் தற்போது செயலிழந்துள்ளது. பிரசித்திப்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் கோயில், நாகூர் ஆண்டவர் தர்கா, நாகை லுார்து மாதா தேவாலயம் ஆகியவை இங்குள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட மனித நேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, திமுக கூட்டணியின் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் முகமது ஜபருல்லாவை விட 20,550 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

image

தற்போதைய தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தங்க கதிரவனும், தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.-வின் ஆளூர் ஷா நவாஸும் போட்டியிடுகின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மஞ்சுளா சந்திரமோகனும், நாம் தமிழர் சார்பில் அகஸ்டின் அற்புதராஜும், மக்கள் நீதி மய்யம் சார்பில் செய்யது அனஸும் களம் கண்டுள்ளனர்.

கடந்தமுறை கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்கிய நிலையில், இம்முறை அதிமுகவே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக நாகை நகரச் செயலாளர் தங்க கதிரவன், உள்ளூர்காரர் என்ற அடையாளத்துடன் போட்டியிடுகிறார்.

தொகுதியை கடந்த முறை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கிய திமுக இம்முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கியுள்ளது. அந்த கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் போட்டியிடுகிறார்.

அமமுக சார்பில் மஞ்சுளா சந்திரமோகன் களத்தில் உள்ளார். நகராட்சி தலைவியாக பணியாற்றிய அனுபவம் உடையவர். மறைந்த இவரது கணவர் சந்திரமோகன் தொகுதி முழுவதும் அறியப்பட்டவர்

நாம் தமிழர் சார்பில் அக்கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில், நாகை மாவட்ட செயலாளர் செய்யது அனஸ் களம் இறங்கியுள்ளார். நாகூர் சாஹிப்மார்கள் வாரிசுதாரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடும் போட்டிக்கு இடையே, புனித ஜார்ஜ் கோட்டைக்குள் காலடி எடுத்து வைக்கப்போகிறவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/r7j-W78_Eew" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்