Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"மாற்றி மாற்றி கட்சியை அமரவைப்பது மாற்றமல்ல!" - சீமான்

"மாற்றி மாற்றி கட்சியை அமரவைப்பது மாற்றமல்ல; அடிப்படை அரசியல் அமைப்பையே மாற்ற வேண்டும்" என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சிக்காக, அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் ஆர்த்திக்கு வாக்கு சேகரித்த சீமான் பேசும்போது, "மாற்றம் என்பது சொல் அல்ல செயல். ஒரு கட்சியில் இருந்து மாறி இன்னொரு கட்சியை ஆட்சியில் அமர்த்துவது... இவ்வாறு மாற்றி மாற்றி கட்சியை அமர வைப்பது மாற்றமல்ல. அடிப்படை அரசியல் அமைப்பையே மாற்ற வேண்டும்.

நாங்கள் கட்டடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல. கட்டடத்தை ஒட்டுமொத்தமாக அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட வந்த புரட்சிவாதிகள்.

ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தே ஆகவேண்டும். ஒரு மனிதன் விவசாயியை நாள் ஒன்றுக்கு மூன்று முறை சந்திக்கிறான்.  உணவு உண்ணும் ஒவ்வொருவரும் நன்றி உணர்ச்சியோடு நினைக்க வேண்டிய ஒருவர் விவசாயி. ஏப்ரல் 6-ஆம் தேதி மாறுவோம்... மாற்றுவோம்... இது மாற்றத்திற்கான நாள்" என்றார் சீமான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3lrbYC4

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்