மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இன்று நேர்காணல் தொடங்கியுள்ளது.
சென்னை சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காணும் திமுக, 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்து நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கடையநல்லூர், சிதம்பரம், வாணியம்பாடி ஆகிய 3 தொகுதிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐயூஎம்எல் போட்டியிடும் இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐயூஎம்எல் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படுவர் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகள் எவை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் மற்றும் அரியலூர் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். இந்த ஆறு தொகுதிகளிலும் எதிர் தரப்பில் அதிமுகவினர் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணியில் ஆதி தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவிநாசி தொகுதியில் தானே போட்டியிடப்போவதாக ஆதி தமிழர் பேரவையின் அதியமான் தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் அதிமுக சார்பில் அவிநாசி தொகுதியில் சபாநாயகர் தனபால் களம் காண்கிறார். திமுக கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான மக்கள் விடுதலை கட்சிக்கு நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்தெ தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இன்று நேர்காணல் தொடங்கியுள்ளது. கட்சி தலைமையகம் தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ நேர்காணலை நடத்துகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2N5k3zCமதிமுக போட்டியிடும் ஆறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இன்று நேர்காணல் தொடங்கியுள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்