Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பாலியல் வன்கொடுமைக்கு உரிமமா திருமணம்? தலைமை நீதிபதிக்கு வலுக்கும் கண்டனங்கள்!

https://ift.tt/3sHZ8Sh

'பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால், சிறைக்கு போகாமல் தப்பி விடலாம் என்ற சிந்தனையை உருவாக்கி விடும்' என்று பெண் உரிமை ஆர்வலர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மராட்டிய மாநிலத்தில் ஒரு சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அரசு ஊழியரின் முன் ஜாமீன் மனு, சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, குற்றம் சாட்டப்பட்டவரை பார்த்து, ‘‘அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நீங்கள் தயாரா? அதற்கு தயார் என்றால், மனுவை பரிசீலிக்கிறோம். இல்லாவிட்டால், நீங்கள் சிறைக்கு போக வேண்டி இருக்கும்’’ என்று கூறியது.

image

இந்த கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 3,500-க்கும் மேற்பட்ட பெண்ணுரிமை ஆர்வலர்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அக்கடிதத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பதவி விலக வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் அவர் கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில், '' பாலியல் குற்றவாளிகளுக்கு திருமணம் என்பது பாலியல் வம்கொடுமைக்கான உரிமம் என்ற செய்தியை தலைமை நீதிபதி சொல்ல வருகிறாரா? அத்தகைய உரிமத்தைப் பெறுவதன் மூலம், பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தவோ அல்லது சட்டப்பூர்வமாக்கவோ முடியும் என்கிற நிலை உருவாகக்கூடும்” என்று அன்னி ராஜா, கவிதா கிருஷ்ணன், கம்லா பாசின், மீரா சங்கமித்ரா, மைமூனா மொல்லா மற்றும் ஜாகியா சோமன் உள்ளிட்ட பிரபல பெண் உரிமை ஆர்வலர்கள் எழுதிய இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image

மேலும் தலைமை நீதிபதி போப்டேவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் பிருந்தா கரத் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ''இதுபோன்ற கேள்விகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை உணர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்தால், ஜெயிலுக்கு போகாமல் தப்பி விடலாம் என்ற சிந்தனையை உருவாக்கி விடும். இத்தகைய கருத்துகள், பாலியல் வன்கொடுமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்து விடும். ஆகவே, உங்கள் கருத்துகளை வாபஸ் பெற வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்