விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அடுத்த சாத்தூர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட அமமுக வேட்பாளர் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு நிலவியது.
ராஜபாளையம் அடுத்த சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பாக, எம்.எல்.ஏ ராஜவர்மன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆசிலாபுரம் பகுதியில் இருந்து தனது பரப்புரையை அவர் தொடங்கினார்.
இன்று இவர் பரப்புரையில் பேசிக் கொண்டிருந்தபோது, வழக்கம் போல இரட்டை இலைக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர், இந்த தொகுதியில் இருந்து விலக்கி மீட்டெடுக்க வேண்டும் என பேசி முடித்தார்.
முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் உடனடியாக அமமுகவில் இணைந்தார். அவருக்கு அமமுக சார்பில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்