புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினர்.
புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் திமுக காங்கிரஸ் கூட்டணி களமிறங்கி இருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி விவகாரம் முடிவுக்கு வந்த உடன், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மதசார்பற்ற கூட்டணியை இறுதி செய்வதென திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸை தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளையும் இந்த கூட்டணி முன்னெடுத்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்த என் ஆர் காங்கிரஸ், வரும் சட்டமன்ற தேர்தலிலும் அதே கூட்டணியில் நீடிக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் கூட்டணி குறித்து கடந்த ஒரு வாரமாக பாஜக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் ரங்கசாமியிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சியில் இருக்கும் பாஜகவிற்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறு திமுக. புதுச்சேரியில் ஆட்சி அமைக்கவும் தங்கள் கூட்டணிக்கு தலைமை ஏற்கவும் என்.ஆர்.ரங்கசாமி வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திமுக முன்னாள் அமைச்சரும் காரைக்கால் மாவட்ட செயலாளருமான நசீம்.
கூட்டணிக்கு தலைமை ஏற்கும்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது என்றும், மக்கள் நலன் கருதி ரங்கசாமி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பாஜக கூட்டணியில் தொடர்வது குறித்து ரங்கசாமிக்கு தயக்கம் இருப்பதாகவும், கூட்டணியிலிருந்து வெளியேற அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் பொதுச் செயலாளர் சந்திரமோகன் உள்ளிட் நிர்வாகிகள், ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். திமுக, அதிமுக, பாஜக அல்லாத அணியுடன் கூட்டணி அமைக்க கமல்ஹாசன் ஆலோசனை தெரிவித்திருப்பதாகவும், அதன்பேரில் ரங்கசாமியை சந்தித்ததாகவும், சந்திரமோகன் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்