Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“கோவில்பட்டியில் யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை” - கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை என்று செய்தி - விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் மூன்றாவது முறையாக கோவில்பட்டியில் போட்டியிடும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கோவில்பட்டி தொகுதியில் யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை. பல்வேறு நேரங்களில் பல்வேறு பிரச்னைகளை தாண்டி அதிமுக வெற்றிபெற்றுள்ளது. 2011ல் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது தன்னை பொதுமக்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். கோவில்பட்டி பகுதியில் 50 ஆண்டு காலமாக இருந்த குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைத்து திட்டங்களை கொடுத்துள்ளோம்.

தன்னிறைவு பெற்ற தொகுதியாக கோவில்பட்டியை உருவாக்கியுள்ளோம் என்ற மனநிறைவோடு மூன்றாவது முறையாக போட்டியிடுகிறேன். அதிமுகவில் வேட்பாளர்பட்டியல் அறிவிக்கும் முன்பே தொகுதி மக்கள் மீண்டும் என்னை போட்டியிட வேண்டும் என்று கூறினர். மேலும் அதிமுகவைதான் வெற்றி பெற வைப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் கமல்ஹாசனின் வாக்கு வங்கி சரிந்துவிடும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி | Minister Kadambur Raju interview - hindutamil.in

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழகத்திலேயே கோவில்பட்டி நகராட்சி தான் சிறந்த நகராட்சி என்ற பெயர் வாங்கும் அளவிற்கு பணிகள் நிறைவேற்றப்பட்டு விருதும் வாங்கியுள்ளது.

குடிமராமத்து, அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்த அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. கோவில்பட்டி தொகுதி உள்ள அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன் என்ற மனநிறைவு என்னிடம் உள்ளது. அந்த நிறைவு மக்களிடம் உள்ளது.

யார் வேட்பாளர் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.வேட்பாளர் அறிவித்தால் போதும் அதிமுக வெற்றி பெறும் என்ற நிலையில்தான் தமிழகம் முழுவதும் உள்ளது.தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக கோவில்பட்டி இருக்கும் என்றும், தமிழகத்தில் தெம்போடு திராணியுடன் தேர்தலை சந்திக்க வேட்பாளர் பட்டியலை முதன் முதலில் வெளியிட்டது அதிமுக தான்.ஆனால் திமுகவினால் வேட்பாளர் பற்றி அறிவிக்க முடியாத நிலை உள்ளது” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3l8kNRa

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்