அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகிய நிலையில், அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக தர மறுத்ததால் அதிருப்தியடைந்த தேமுதிக நேற்று அதிமுக கூட்டணியிலிருந்து தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தது.
இந்நிலையில், வருகிற தேர்தலில் தேமுதிக தனித்து களம் காணுமா? அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில், அமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமமுக துணை பொதுச் செயலாளர் பழனியப்பன், மாணிக்க ராஜாவுடன் தேமுதிகவின் பார்த்தசாரதி, டாக்டர் இளங்கோவன் ஆகியோர் பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2PS1vE7

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்