Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

”பள்ளிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்” - பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன்

பள்ளிகள் மூடப்படும் என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என செய்தி பரவியது. இந்நிலையில் இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் “ பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது. ஜனவரி மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. மே மாதம் 3-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே பாடங்களை நடத்துவது சிரமம் நிறைந்ததாக உள்ளது. அதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழங்கம்போல் இயங்கும்” எனக் கூறினார்.

ஏப்ரல் 6-ஆம் தேதி மட்டும் தேர்தல் காரணமாக பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்படுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கொரோனா இறப்பு எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருப்பதால் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதாரத்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/30MrtuX

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்