பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடியின் புகைப்படங்களை அகற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 5 மாநிலங்களில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் மோடியின் புகைப்படத்துடன் கூடிய மத்திய அரசின் பேனர்களை அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் கூடிய மத்திய அரசின் விளம்பர பேனர்கள் அடுத்த 72 மணி நேரத்தில் அகற்றப்பட வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றப்படாமல் இருந்தால் அது தேர்தல் நடத்தை விதி மீறலாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, பல்வேறு இடங்களில் குறிப்பாக பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பேனர்கள் இருப்பது தொடர்பாக புகார் அளித்தனர்.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் நிலையங்களில் பேனர்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றும் வேலை தொடங்கியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்