Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

கூட்டணிக் கட்சிகளுடனான ஒற்றுமை சிதைவடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பு திமுகவுக்கு இருப்பதாக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும். கூட்டணி சிதைவு ஏற்பட்டு விடாமல் திமுக பார்த்து கொள்ள வேண்டும். ஒற்றுமை தான் முக்கியம்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது முடிவெடுங்கள் என எடப்பாடி பழனிசாமி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தார். அதை 2 வருடங்காக அவர் புரட்டி கூட பார்க்கவில்லை. உள் ஒதுக்கீடு விஷயத்தில் அரை மணி நேரத்தில் ஒப்புதல் அளிக்கிறார். யாரை கொள்ளை காரன் என அன்புமணி சொன்னாரோ அவரோடு உறவாடுகிறார். உள் ஒதுக்கீடு இப்போதே அமலுக்கு வராது என பழனிசாமிக்கும் தெரியும், ராமதாசுக்கும் தெரியும். சாதியை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறார்கள்.

image

முழுக்க முழுக்க தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பிரதமர் ஜாதியோடு இணைந்து தன்னை நரேந்திரன் - தேவேந்திரன் என பேசலாமா? சாதிகளை அணித்திரட்டி உணர்வுகளை தூண்டி விடும் வேளையில் பாஜக அதிமுக ஈடுபட்டு வருகிறது. 400 ரூபாய்க்கு இருந்த எரிவாயுவை 900 ரூபாய்க்கு ஆக்கி இருக்கிறீர்கள். அதனால் அதிக பாதிப்படைவது அதிக மக்கள் தொகை உள்ள இந்துக்கள் தான். இந்துக்களுக்கு துரோகம் செய்வது பாஜக தான்.

அரசியல் ஆதாயத்திற்காக சாதி வெறியையும், மத வெறியையும் தூண்டி விட்டால் இலங்கை போல தமிழகம் ஆகி விடும். நாங்கள் ஆட்சிக்கு வர போவது கிடையாது. இதுவரை ஆட்சிக்கு வந்ததில்லை. பெரும்பாண்மை இடம் பிடிப்பது எங்கள் இலக்கு கிடையாது. ஆளுகிற கட்சிகளுக்கு எதிராக போராடி வரும் கட்சி. யார் வந்தாலும் மாறபோவது இல்லை. எதிர் காலத்திலும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என மேடையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “1952லிருந்து தமிழகத்தில் மக்களுக்கு சில அடிப்படை பிரச்சினை நிறைவேற்ற படாமல் உள்ளது. எனவே அப்போது இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களுக்காக போராடி வருகிறோம். அந்த அர்த்தத்தில் கூறினேன். வருங்காலத்தில் யார் ஆட்சி வந்தாலும் மக்களுக்காக போராடுவோம்” என விளக்கம் அளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3qnMB53

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்