கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் அடுத்து வரும் நாட்களில் மேலும் விரிவாக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுவரை 4 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதில் 0.000432 % பேருக்கே தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச சுகாதார அமைப்பு தந்துள்ள வழிகாட்டுதல் படியே ஒவ்வொரு பிரிவினராக தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், அறிவியல் ரீதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இரு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ள நிலையில் மேலும் சில ஊசிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vIgkJRகொரோனா தடுப்பூசி போடும் திட்டம் அடுத்து வரும் நாட்களில் மேலும் விரிவாக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுவரை 4 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதில் 0.000432 % பேருக்கே தீவிர பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச சுகாதார அமைப்பு தந்துள்ள வழிகாட்டுதல் படியே ஒவ்வொரு பிரிவினராக தடுப்பூசி போடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர், அறிவியல் ரீதியாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இரு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ள நிலையில் மேலும் சில ஊசிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்