Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது: ஓபிஎஸ்

https://ift.tt/3s11xaN

"சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது. மக்களை பாதிக்கும் எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது" என்று தமிழகத்தின் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக வேட்பாளர் சிறுனியம் பலராமன் மற்றும் கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து பொன்னேரியில் பரப்புரை செய்த அவர் பேசியது:

"உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடம்... இதுவே நல்ல ஆட்சி. 2023-க்குள் தமிழகம் முழுவதும் காங்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும். 2016-இல் 4 கிராம் தாலிக்கு தங்கத்தை 8 கிராமாக உயர்த்தியவர் ஜெயலலிதா. அனைவருக்கும் மிக்சி, ஃபேன், கிரைண்டர் வழங்கப்பட்டுள்ளன. ஆணுக்கு பெண் நிகர் என்ற நிலையை பெரியாருக்கு பின் செய்தவர் ஜெயலலிதா.

2006 முதல் 2011 வரை திமுக மைனாரிட்டி ஆட்சியாக இருந்தபோது மின்சார தட்டுப்பாடு இருந்தது. அதன்பின் ஜெயலலிதா ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இல்லை. திமுகவினர் பிரயாணி கடை, பரோட்டோ கடைகளில் சண்டை போடுகின்றனர்.

சமுகப் பாதுகாப்பு திட்டங்களை ஜெயலலிதா நடைமுறைப்படுத்தினார். மாணவர்களுக்கு லேட்-டாப் வழங்கியவர் ஜெயலலிதா. இந்தியாவில் கல்வியில் தமிழகம்தான் முன்னிலையில் உள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது.

இயற்கை சீற்றங்களில் நிவாரணம் தரும் ஆட்சி, அதிமுக ஆட்சி. கொரோனாவை கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என பிரதமர் பாராட்டினார். திமுக ஆட்சியில் தினகரன் அலுவலகத்தை எரித்து 3 பேர் உயிரிழந்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் கையெழுத்து போட்டது திமுக - காங்கிரஸ் ஆட்சி. மக்களுக்கு எது தேவையில்லையோ, அதை தடுத்து நிறுத்தி வருகிறது திமுக.

தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும் முன்பே ரூ.12,100 கோடி வேளாண் கடன் தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உறுதியாக தருவோம். முதியோர் உதவி தொகை ரூ.2000, வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கவோம்.

எத்தனையோ ஆட்சி கண்ட தமிழகத்தில் 10 ஆண்டுகளில், குறை சொல்ல முடியாத ஆட்சி நடக்கிறது. 2016-இல் ஆண்ட கட்சி மீண்டும் ஆள விடாமல் தொடர்ந்து ஆண்டு வருகிறோம். மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்போம்.

கலர் சட்டை போட்டு வந்த ஸ்டாலின், தற்போது 'விக்' வைத்து வருகிறார். 234 தொகுகளிலும் பாரபட்சம் பார்க்காமல் அரசு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறது.

சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது. மக்களை பாதிக்கும் எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது" என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்