கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை ஊழியர்கள் சிலருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்திலும் கடந்த மூன்று நாட்களாக தினமும் 100 பேருக்கு மேலாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் ஊழியர்கள் 4 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அந்த வங்கிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்காக வங்கிக்கு வருபவர்கள் அருகில் உள்ள ஆவாரம்பாளையம் மற்றும் காளப்பட்டி பகுதிகளில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வங்கி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ciC2MZகோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை ஊழியர்கள் சிலருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து வங்கி தற்காலிகமாக மூடப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலையின் தாக்கம் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்திலும் கடந்த மூன்று நாட்களாக தினமும் 100 பேருக்கு மேலாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் ஊழியர்கள் 4 பேருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி அந்த வங்கிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவசரத் தேவைக்காக வங்கிக்கு வருபவர்கள் அருகில் உள்ள ஆவாரம்பாளையம் மற்றும் காளப்பட்டி பகுதிகளில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வங்கி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்