Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமல், சீமான், தினகரன் இன்று வேட்புமனுத்தாக்கல்

வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கைகள் என பரபரத்து வரும் தமிழக அரசியல் களம், முக்கிய தலைவர்கள் பரப்புரையை தொடங்கவுள்ளதால் இன்னும் அனல் பறக்கவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்து பரப்புரை பயணத்தை தொடக்குகின்றனர்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் பழனிசாமி அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் இன்று மதியம் ஒரு மணி அளவில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். அதனை தொடர்ந்து, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், கொங்கணாபுரம் உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். 3 ஆவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

கழகங்களை பஞ்சராக்கும் தினகரன், சீமான், கமல் கட்சிகள்!' - தேர்தல் நம்பர் கேம் |TTV Dinakaran, Seeman, Kamal parties role in 2021 assembly election - analysis

அதன் தொடர்ச்சியாக, அதே தொகுதியில் பரப்புரையில் ஈடுபடுகிறார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கோவில்பட்டியில் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனுத் தாக்கல் செய்ய இருக்கிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3tbDuX0

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்