அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, கேட்ட சீட்டுகளை கொடுக்கவில்லை எனக்கூறி அக்கூட்டணியில் இருந்து விலகியது. மேலும் அதிமுகவை படுதோல்வியடையை செய்வதே தேமுதிகவின் வேலை என அக்கட்சியினர் தெரிவித்து வந்தனர். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷும் அதிமுகவையும் அக்கட்சியின் தலைமையையும் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து அக்கட்சி டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது தேமுதிக - அமமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் தேமுதிகவிற்கு 50 லிருந்து 57 தொகுதிகள் வரை அமமுக ஒதுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் தேமுதிக கேட்ட 35 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய அமமுக ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3vpPIgHஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக, கேட்ட சீட்டுகளை கொடுக்கவில்லை எனக்கூறி அக்கூட்டணியில் இருந்து விலகியது. மேலும் அதிமுகவை படுதோல்வியடையை செய்வதே தேமுதிகவின் வேலை என அக்கட்சியினர் தெரிவித்து வந்தனர். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷும் அதிமுகவையும் அக்கட்சியின் தலைமையையும் கடுமையாக விமர்சித்தனர்.
இதையடுத்து அக்கட்சி டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. அதன்படி தற்போது தேமுதிக - அமமுக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் தேமுதிகவிற்கு 50 லிருந்து 57 தொகுதிகள் வரை அமமுக ஒதுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் தேமுதிக கேட்ட 35 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய அமமுக ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்