அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில், மதியம் 12:30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக சத்யபிரதா சாகு அரசியல் கட்சியினரை சந்தித்து ஆலோசிக்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக அரசியல் கட்சியினர், தங்களுடைய ஒவ்வொரு பரப்புரை திட்டம் குறித்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெறுவது குறித்தும் அறிவுறுத்தப்படவுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்