கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக என பெரம்பலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பெரம்பலூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு திரட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது "ஸ்டாலின் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன் அதேபோல் நான் கேட்கும் கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
திமுகவினர் செய்த ஊழலை மறைக்க அதிமுகவினர் மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு வைக்கிறார். மக்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். 2ஜி ஊழல் பற்றி குறிப்பிட்டு, கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக" என பேசினார்.
" அதிமுக பற்றி குறைசொல்ல ஸ்டாலினுக்கு தகுதியில்லை. 10 வருடமாக ஆட்சியில் இல்லாததால் திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர். தர்மம் நீதி உண்மைதான் வெல்லும்
மக்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வருவதற்காக சிவாஜியை மிஞ்சி நடிக்கிறார். என்றும் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. திமுக ஆட்சியில் இருக்கும்போது மனு வாங்கி மக்களின் குறைகளை தீர்த்திருக்க வேண்டும். இப்போது மனு வாங்குவது மக்களை ஏமாற்றும் செயல். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆச்சு எங்கே போச்சு” எனக் கேள்வி எழுப்பினார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆகவும் முடியாது மனு வாங்கி போட்ட பெட்டியை திறக்கவும் முடியாது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ப்ளான் போட்டு மக்களை மயக்கி வாக்குகள் பெற முயற்சிக்கிறார். மக்கள் முன்பை விட விழிப்பாக இருக்கிறார்கள். முதலமைச்சர் உதவி மையத்திற்கு போன் செய்து புகார் அளித்தால் அதிகாரிகள் நேரடியாக வந்து குறையை தீர்த்து வைப்பார்கள். மக்கள் நினைப்பதை அதிமுக அரசு நிறைவேற்றுகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2OJQC7gகண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக என பெரம்பலூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பெரம்பலூர் (தனி) சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு திரட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது "ஸ்டாலின் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன் அதேபோல் நான் கேட்கும் கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
திமுகவினர் செய்த ஊழலை மறைக்க அதிமுகவினர் மீது ஸ்டாலின் ஊழல் குற்றச்சாட்டு வைக்கிறார். மக்களை குழப்புவதற்காக வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார். 2ஜி ஊழல் பற்றி குறிப்பிட்டு, கண்ணுக்குத் தெரியாத காற்றில் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக" என பேசினார்.
" அதிமுக பற்றி குறைசொல்ல ஸ்டாலினுக்கு தகுதியில்லை. 10 வருடமாக ஆட்சியில் இல்லாததால் திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர். தர்மம் நீதி உண்மைதான் வெல்லும்
மக்களை ஏமாற்றி அதிகாரத்திற்கு வருவதற்காக சிவாஜியை மிஞ்சி நடிக்கிறார். என்றும் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. திமுக ஆட்சியில் இருக்கும்போது மனு வாங்கி மக்களின் குறைகளை தீர்த்திருக்க வேண்டும். இப்போது மனு வாங்குவது மக்களை ஏமாற்றும் செயல். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களிடம் வாங்கிய மனுக்கள் என்ன ஆச்சு எங்கே போச்சு” எனக் கேள்வி எழுப்பினார்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆகவும் முடியாது மனு வாங்கி போட்ட பெட்டியை திறக்கவும் முடியாது எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ப்ளான் போட்டு மக்களை மயக்கி வாக்குகள் பெற முயற்சிக்கிறார். மக்கள் முன்பை விட விழிப்பாக இருக்கிறார்கள். முதலமைச்சர் உதவி மையத்திற்கு போன் செய்து புகார் அளித்தால் அதிகாரிகள் நேரடியாக வந்து குறையை தீர்த்து வைப்பார்கள். மக்கள் நினைப்பதை அதிமுக அரசு நிறைவேற்றுகிறது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்