வேட்பாளர்களின் விதவிதமான வாக்குசேகரிப்பு உத்திகளால் தமிழக சட்டப்பேரவை தேர்தல் களம் இன்னும் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க, பரப்புரையில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட மொத்த வித்தைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில...
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர், மண்வெட்டியை கொண்டு வயல்வெளியில் இறங்கி களையெடுக்கும் பணியில் ஈடுபட்டார். ஆலந்தூர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரத்பாபு, தேநீர் கடையில் டீ மாஸ்டருக்கே பால் போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன் நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக வேட்பாளர் எஸ்.சந்திரனும், திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் மகள் நிஷாவும் நெசவு செய்து மக்களின் கவனத்தை ஈர்த்தனர். சிவகாசி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவரது ஆதரவாளர்கள் டார்ச் லைட்டை கையில் வைத்திருந்தது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
மதுராந்தகம் தொகுதியில் போட்டிடும் மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா டவுன் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஒரு பாஸ்ட் புட் கடையில் வாக்கு சேகரித்த அவர், பின்னர் கடையில் பாஸ்ட் புட் மாஸ்டர் போல் பிரைட் ரைஸ் தயாரித்தார். தயாரித்த உணவை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து அசத்தினார். கோவையில் பரப்புரையின்போது மயக்கமடைந்த தொண்டருக்கு முதலுதவி செய்து தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்