ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவேந்திர குல வேளாளர், அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிமுக தேர்தல் அறிக்கையை திரும்பப்பெறாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று குறிப்பிட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வருவதாக தகவல் வெளியானதை அடுத்து கோட்டைப்பட்டி ஊர் மக்கள் தங்களது கிராமத்தின் எல்லையில் ஒன்று கூடி அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்க குவிந்தனர். தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக வேட்பாளர் கோட்டைபட்டி பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரவில்லை.
அதனையடுத்து கோட்டைப்பட்டி கிராம மக்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் தங்களை ஏமாற்றியதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3cHIpblஸ்ரீவில்லிபுத்தூரில் தேவேந்திர குல வேளாளர், அரசாணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிமுக தேர்தல் அறிக்கையை திரும்பப்பெறாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று குறிப்பிட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மான்ராஜ் தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வருவதாக தகவல் வெளியானதை அடுத்து கோட்டைப்பட்டி ஊர் மக்கள் தங்களது கிராமத்தின் எல்லையில் ஒன்று கூடி அவரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுக்க குவிந்தனர். தொடர்ந்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் அதிமுக வேட்பாளர் கோட்டைபட்டி பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரவில்லை.
அதனையடுத்து கோட்டைப்பட்டி கிராம மக்கள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய மாநில அரசுகள் தங்களை ஏமாற்றியதாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைப்பதாக உறுதி அளித்திருக்கிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்