உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் உள்ள 150-200 கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை தடைசெய்யும் சுவரொட்டிகளை வைத்ததாக இந்து யுவா வாகினி உறுப்பினர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில், இந்த சுவரொட்டிகளை வைத்தப்பின்னர். இந்து யுவா வாகினி என அழைக்கப்படும் வலதுசாரி அமைப்பின் உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் தஸ்னாவில் உள்ள கோவிலில் குடிநீர் குடித்ததற்காக, ஒரு முஸ்லீம் சிறுவன் தாக்கப்பட்டதை அடுத்து இச்செயலை செய்ய இந்த அமைப்பு முடிவு செய்தது. மார்ச் 21 அன்று மாலை இந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை அகற்ற எஸ்.எச்.ஓ கோட்வாலி, ஷிஷுபால் சிங் நேகி, இந்து யுவா வாகினி அமைப்பின் உறுப்பினர்களுடன் பேசினார்.
இந்து யுவா வாகினியின் பொதுச் செயலாளர் ஜீது ரந்தாவா, “இதுபோன்ற சுவரொட்டிகளை நகரத்தில் வைக்க வேண்டாம் என்று போலீஸ்காரர் அச்சுறுத்தினார்கள். அவர்கள் ஏன் இப்படி முஸ்லிம்களுக்கு சாதகமாக முயற்சிக்கிறார்கள்? உத்தரகண்ட் போன்ற ஒரு இடத்தில் இது நடக்கிறது என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் என் மீது வழக்கு பதிவு செய்தால் எனக்கு கவலையில்லை, ஆனால் உத்தரகண்ட் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கோவிலுக்கு வெளியே இந்த சுவரொட்டிகள் இருப்பதை நான் உறுதிப்படுத்தப் போகிறேன், ”என்று அவர் கோபமாக கூறினார்.
டெஹ்ராடூனின் மக்கள் தொடர்பு அலுவலர் பிரதீப் சிங், நிலைமை கவனிக்கப்பட்டு வருவதாகவும், மார்ச் 21 மதியம் பல சுவரொட்டிகள் அகற்றப்பட்டதாகவும் கூறினார். இதுபற்றி பேசிய இந்து யுவா வாகினியை சேர்ந்த ஜீது ரந்தாவா, “சில சுவரொட்டிகளை கழற்றியது உண்மைதான், ஆனால் பல தொடர்ந்து வைக்கப்பட்டன. எனக்கு எதிரான வழக்குகள் குறித்து கவலையில்லை, சுவரொட்டிகள் கழட்டாமல் பார்த்துக் கொள்வோம். எனது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு ஆதரவாக நிற்பார்கள், முழு இந்து சமூகமும் என்னுடன் நிற்பார்கள், நீங்கள் பார்ப்பீர்கள்” என தெரிவித்தார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்