Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“நீங்கள் நலமுடன் இருந்து திமுக ஆட்சியை பார்க்க வேண்டும்!” -பழனிசாமிக்கு ஸ்டாலின் பதில்

’திமுகவை வீழ்த்த உங்கள் உயிரை எல்லாம்  தர வேண்டாம், நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும், திமுக ஆட்சியை பார்க்க நீங்கள் இருக்க வேண்டும்’ என முதல்வர் பழனிசாமியின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலி பதில் அளித்து காங்கேயம் பரப்புரையில் பேசியுள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் இன்று பரப்புரை மேற்கொண்டார். காங்கேயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சாமிநாதன், பல்லடம் சட்டமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் முத்துரத்தினம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பேசும் போது, “எந்த சூழ்நிலையிலும் நான் உங்களோடு இருக்கிறேன் என்று நினைத்து தான் தற்போதும் நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன். முதல்வர் பழனிசாமி தோல்வி பயத்தில் உளறி வருகிறார். சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்பது போல கடைசி நேரத்தில்  புலம்பி வருகிறார். திமுக -வை வீழ்த்த தன்னையே பலியிட தயார் என முதல்வர் பேசியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாகவே தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார். திமுக-வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துள்ளார்களே தவிர திமுக -வை அழிக்க முடியாது என கூறியவர் திமுக -வை வீழ்த்த இன்னும் ஒருவரும் பிறக்கவும் இல்லை. பிறக்கவும் முடியாது. 

image

கலைஞருக்கு நான் மட்டும் மகன் அல்ல. இயக்கத்தில் உள்ள அனைவரும் மகன்கள் தான். பல சுள்ளான்கள், அயோக்கியர்கள் அண்ணா காலம் முதலே திமுக-வை அழிக்க போகிறோம் என கூறி வருகிறார்கள். 50 வருடமாக இதை கேட்டு வருகிறேன். மத்தியில், மாநிலத்தில் ஆளும் கட்சியாக நாம் இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக -வை வீழ்த்த எத்தனை பேர் ஒன்றுகூடி உள்ளார்கள். கலைஞர் இல்லை அதனால் வீழ்த்தி விடலாம் என முட்டாள்கள் நினைக்கின்றனர். 234 தொகுதிகளிலும் கலைஞர் நிறைந்துள்ளார். திமுக -வை வீழ்த்த உங்கள் உயிரை எல்லாம்  தர வேண்டாம். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும். திமுக ஆட்சியை பார்க்க நீங்கள் இருக்க வேண்டும்” என முதல்வருக்கு ஸ்டாலின் பதில் கூறினார். 

மேலும், “பாஜக என்ன குட்டிக்கரணம் போட்டாலும் இங்கு வரப்போவதில்லை. அவர்கள் வாஷ் அவுட் என்பது நாடாளுமன்ற தேர்தலின் போதே தெரிந்து விட்டது. அதிமுக 1 இடங்களில் கூட வரக்கூடாது. நான் பொறாமையில் சொல்லவில்லை. அதிமுக எம்.எல்.ஏ வந்தால் அவர்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ வாக தான் இருப்பார்கள். அதனால் அவர்களை சுத்தமாக வாஷ் அவுட் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதோடு, நீட் திணிப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, சுயமரியாதை இழப்பு போன்றவைகளை எல்லாம் மீட்டெடுக்க உதயசூரியன் சின்னத்தை ஆதரிக்க வேண்டும்” என்றும் மக்களிடையே ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

ஸ்டாலின் பரப்புரையை ஆரம்பிக்கும் போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட சொல்லி , ஆம்புலன்ஸ் சென்ற பிறகு தனது பரப்புரையை மேற்கொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3weKkgT

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்